சுக மகரிஷி வரலாறு:-
சுகப் ப்ரம்ம மஹரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருக்கக் கூடும். கிளி போன்ற முகம் உடைய இம்மகரிஷி சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப்பட்டார். வியாச முனிவரின் மகன் சுக முனிவர். அவரை எல்லோரும் 'சுக பிரம்ம மகரிஷி' என்றே அழைப்பர். இவர் மஹாபாரதத்தை உலகுக்குத் தந்த வேத வியாசரின் புதல்வர். பிறந்தவுடன் மகா ஞானியாய்ப் பிரம்ம ஞானியாய் இருந்தார். நாரத மாமுனிவர் இவர்க்கு மேலும் ஞானோபதேசம் செய்தார்.
முழுஞானம் பெற்ற இவர் சுகப்பிரம்மம் என்று அழைக்கப்பட்டார். தந்தையைப் பிரிந்து தவத்திற்குச் சென்றார்.இவரின் பிரிவு தாங்காத வியாசர் மகனே! மகனே! என்று அழைத்துப்பின் செல்ல தாவரங்கள் அனைத்தும் ஏன்? ஏன்? என்று பதில் கூறின. எனவே சுகப்பிரம்மம் அனைத்திலும் வியாபித்து இருக்கின்றார் என்று அறிந்தார் வியாசர்.
தந்தையைக் காட்டிலும் தவவன்மை மிக்கவர் சுகப்பிரம்மம் சனகரிடமும் ஞான உபதேசம் பெற்றார்.
வியாசரும், சுகரும் ஒருமுறை நதிக்கரை வழியே சென்று கொண்டு இருந்தனர். நதியில் தேவப்பெண்கள் நீராடிக் கொண்டு இருந்தனர். முன்னால் சென்ற சுகமகரிஷியைக் கண்டும் கவலையின்றி நீராடிய தேவப்பெண்கள் பின்னால் வந்த வியாசரைக் கண்டு வெட்கமுற்று ஆடைகளால் உடலை மறைத்தனர்.
இதனைக் கண்டு வியந்த வியாசர் அவர்களிடம் காரணம் கேட்டார். என் மகன் வாலிபன், அவனைக் கண்டு வராத வெட்கம் கிழவனான என்னைக் கண்டு உங்களுக்கு வந்ததேன் எனக் கேட்டார்.
சுவாமி! அதோ பாருங்கள் உங்கள் மகன் எதனையும் காணாது சென்று கொண்டு இருக்கின்றார். அவர் கண்களுக்கு அனைத்தும் பிரம்மமாய்த் தோன்றுகின்றன. உமக்கு அப்படி இல்லையே! ஆண் பெண் என்னும் வேறுபாடுகள் உமக்கு தெரிகின்றன. அதனால் உங்களைக் கண்டவுடன் வெட்கமுற்றோம் என்றனர் தேவப் பெண்கள்.
எனவே அனைத்திலும் பிரம்மத்தைத் தரிசிக்கும் பக்குவம் சுகமகரிஷிக்கு இருந்தது.
எப்போதும் சுகமாக இருப்பவர் ஒருவர்தான். அவர்தான் சுகப்ரம்மம் என்ற சுக மகரிஷி. இந்த உலகத்திற்கு பாகவதத்தை உபதேசித்தவர்.
என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது நேர் சீடர்தான் ஆதி சங்கரர். இதிலிருந்து சுக முனிவரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
சாபம் பெற்ற சுகமுனிவர் கிளியுருவங்கொண்டு இறைவனை வழிபட்ட தலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம்.. அழகிய கிளி முகங் கொண்ட சுக முனிவரின் மூலவர் உற்சவ மூர்த்தியும் உள்ளது.இதனாலேயே சுகவனம் என்றும் சுகவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
பிரம்ம நிலைக்கு வந்த போதும் பரிபூரண ஞானத்தைத் தேடி அலைந்து திரிந்து, சிவபெருமானே நெடுங்குன்றாய் இருக்கும் திருவண்ணாமலை சாரலை அடைந்தார்.
சுகர் முன் இறைவனும் தோன்றினார்.
இறைவனைக் கண்ணுற்றதும், சுகர் அழுது தொழுது புலம்புகிறார்.
எந்தப் பிறவியில் என்ன பாவம் செய்தேனோ, தங்களின் திருவடியை விட்டு நீங்கி, இப்பிறவி எடுத்து விட்டேன். எனக்கு முக்திப் பேறு அளிக்க வேண்டும் இறைவா! என வேண்டுதல் விடுத்தார். அங்கனமே இறைவனின் ஆசியில் முக்திபெறு பெற்றார்.

No comments:
Post a Comment